எண்ணாகமம் 1:18 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202218 இரண்டாம் மாதம் முதலாம் நாளில், இஸ்ரயேலின் முழு சமுதாயத்தையும் ஒன்றுகூட்டினார்கள். மக்கள் தங்கள் பரம்பரையைத் தங்கள் வம்சங்களின்படியும், குடும்பங்களின்படியும் குறிப்பிட்டார்கள். இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய மனிதர்கள் ஒவ்வொருவரும், பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்18 இரண்டாம் மாதம் முதல் தேதியில் சபையார் எல்லோரையும் கூடிவரச்செய்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள்தங்கள் குடும்பத்தின்படியும், முன்னோர்களுடைய வம்சத்தின்படியும், பெயர் கணக்கின்படியும், இருபது வயதுள்ளவர்கள்முதல் தலைதலையாகத் தங்களுடைய வம்சாவளியைத் தெரிவித்தார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்18 மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் ஜனங்களைச் சேர்த்துக் கூட்டினர். பிறகு, அவர்கள் தங்கள் குடும்பம், மற்றும் கோத்திரங்களின்படி பட்டியலிடப்பட்டனர். இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள எல்லா ஆண்களும் பட்டியலிடப்பட்டனர். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)18 இரண்டாம் மாதம் முதல் தேதியில் சபையார் எல்லாரையும் கூடிவரச்செய்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள்தங்கள் குடும்பத்தின்படிக்கும், பிதாக்களுடைய வம்சத்தின்படிக்கும், நாமத்தொகையின்படிக்கும், இருபது வயதுள்ளவர்கள்முதல் தலைதலையாகத் தங்கள் வம்ச உற்பத்தியைத் தெரிவித்தார்கள். Viz kapitola |