மாற்கு 9:43 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202243 உனது கை உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டிப்போடு. நீ இரண்டு கைகளுடன் அணைந்து போகாத நெருப்புள்ள நரகத்திற்குள் போவதைப் பார்க்கிலும், ஊனமுள்ளவனாய் நித்திய வாழ்விற்குள் போவது சிறந்தது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்43 உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கைகள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திற்குப் போவதைவிட, ஊனமுள்ளவனாக ஜீவனுக்குள் போவது உனக்கு நலமாக இருக்கும். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)43 un kai unaku irdar̄al uɹndākināl, adhai thar̄ithu pōɹdu; nī iraɹndu kaiyuɹdaiyavanāi aviyādha akiniyuɹlla narahathilē pōvadhai pārkilum, ūnanāi jīvanukuɹl piravēsipadhu unaku nalamāyirukum. Viz kapitolaபரிசுத்த பைபிள்43 உங்கள் கைகளில் ஒன்று நீங்கள் பாவம் செய்யக் காரணமாக இருக்குமானால் அதனை வெட்டி எறியுங்கள். உன் உயிரை எப்போதைக்கும் இழப்பதைவிட உன் சரீரத்தின் ஒரு பகுதியை இழப்பது பரவாயில்லை. இரண்டு கையோடு நரகத்துக்குப் போவதை விட இது நல்லது. அங்கு நெருப்பு அடங்காமல் எரியும். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு43 உனது கை உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால் அதை வெட்டிப் போடு. நீ இரண்டு கைகளுடன் ஒருபோதும் அணையாத நெருப்புள்ள நரகத்திற்குள் போவதைப் பார்க்கிலும் ஊனமுற்றவனாய் நித்திய வாழ்விற்குள் போவது சிறந்தது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)43 உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு கையுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே போவதைப்பார்க்கிலும், ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். Viz kapitola |