மாற்கு 8:33 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202233 இயேசு திரும்பி தமது சீடர்களை நோக்கிப்பார்த்து, பேதுருவைக் கண்டித்து, “சாத்தானே எனக்குப் பின்னாகப் போ! நீ இறைவனுடைய காரியங்களைச் சிந்திக்காமல் மனிதனுக்கேற்ற காரியங்களையே சிந்திக்கிறாய்” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்33 அவர் திரும்பித் தம்முடைய சீடர்களைப் பார்த்து, பின்பு பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ தேவனுக்குரிவைகளைச் சிந்திக்காமல் மனிதனுக்குரியவைகளைச் சிந்திக்கிறாய் என்று சொல்லி, அவனைக் கடிந்துபேசினார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)33 avar thirumbi thammuɹdaiya sīsharai pārthu, pēdhuruvai nōki: ‘yenaku pinnāha pō, sāthānē, nī dhēvanuku ētravaihaɹlai j̄indhiyāmal manusharuku ētravaihaɹlai j̄indhikir̄āi’ endru solli, avanai kaɹdindhu koɹndār. Viz kapitolaபரிசுத்த பைபிள்33 ஆனால் இயேசு மறுபக்கம் திரும்பி தன் சீஷர்களைப் பார்த்தார். பிறகு அவர் பேதுருவைக் கண்டித்தார். “சாத்தானே என்னை விட்டு விலகிப்போ! நீ தேவனுடைய காரியங்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறாய். நீ மனிதர் முக்கியமாகக் கருதும் காரியங்களைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டிருக்கிறாய்” என்றார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு33 அப்போது, தனது சீடர்களை திரும்பிப் பார்த்த இயேசு பேதுருவைக் கண்டித்து, “எனக்குப் பின்னாகப் போ சாத்தானே! நீ இறைவனுடைய காரியங்களைச் சிந்திக்காமல் மனிதனுக்குரிய காரியங்களையே சிந்திக்கிறாய்” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)33 அவர் திரும்பித் தம்முடைய சீஷரைப் பார்த்து, பேதுருவை நோக்கி: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்று சொல்லி, அவனைக் கடிந்து கொண்டார். Viz kapitola |