மாற்கு 15:1 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 அதிகாலையிலேயே தலைமை ஆசாரியர்களும், யூதரின் தலைவர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும், முழு ஆலோசனைச் சங்கத்தினரும் சேர்ந்து ஒரு தீர்மானத்திற்கு வந்தார்கள். அதன்படி அவர்கள் இயேசுவைக் கட்டிக் கொண்டுபோய், பிலாத்துவிடம் ஒப்படைத்தார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 அதிகாலையிலே, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் வேதபண்டிதர்களும் ஆலோசனைச் சங்கத்தினர்கள் அனைவரும் கூடி ஆலோசனைபண்ணி, காவலர்கள் இயேசுவின் கரங்களைக் கட்டிக் கொண்டுபோய், பிலாத்துவிடம் ஒப்புக்கொடுத்தார்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)1 poɹudhu viɹdindhavuɹdanē, piradhāna āsāriyarum mūparum vēdhabāraharum ālōsanai sangathār anaivarum kūɹdi ālōsanai baɹnni, iyēsuvai kaɹti koɹndupōi, pilāthuvin iɹdathil opukoɹduthārhaɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்1 அதிகாலையில் தலைமை ஆசாரியர்கள், யூதத் தலைவர்கள், வேதபாரகர்கள் அனைவரும் கூடி இயேசுவை என்ன செய்வது என்று கலந்து ஆலோசித்தனர். அவரைக் கட்டி ஆளுநர் பிலாத்துவிடம் அழைத்துச் சென்றனர். அவர்கள் இயேசுவைப் பிலாத்துவிடம் ஒப்படைத்தனர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 அதிகாலையிலேயே தலைமை மதகுருக்கள், மூப்பர்களுடனும் நீதிச்சட்ட ஆசிரியர்களுடனும் முழு நியாயசபையினருடனும் ஒரு தீர்மானத்திற்கு வந்தார்கள். அதன்படி அவர்கள் இயேசுவை பிணைத்துக் கட்டி பிலாத்துவிடம் கொண்டுபோய் ஒப்படைத்தார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 பொழுது விடிந்தவுடனே, பிரதான ஆசாரியரும் மூப்பரும் வேதபாரகரும் ஆலோசனைச் சங்கத்தாரனைவரும் கூடி ஆலோசனைபண்ணி, இயேசுவைக் கட்டிக்கொண்டுபோய், பிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள். Viz kapitola |