மத்தேயு 26:64 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202264 இயேசு அதற்குப் பதிலாக, “ஆம், நீர் சொல்கிறபடிதான்; ஆனால் நான் உங்கள் எல்லோருக்கும் சொல்கிறேன்: இதுமுதல் மானிடமகனாகிய நான் வல்லமையுள்ள இறைவனுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்திருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள்” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்64 அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனிதகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபக்கத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். Viz kapitolaபரிசுத்த பைபிள்64 அதற்கு இயேசு, “ஆம் நான் தான், ஆனால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். எதிர்காலத்தில் தேவனுடைய வலது பக்கத்தில் மனிதகுமாரன் அமர்ந்திருப்பதைக் காண்பீர்கள். மேலும் வானத்து மேகங்களின் மீது மனித குமாரன் வருவதைக் காண்பீர்கள்” என்று விடையளித்தார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு64 இயேசு அதற்குப் பதிலாக, “ஆம், நீர் சொல்கின்றபடிதான். ஆனாலும் நான் உங்கள் எல்லோருக்கும் சொல்கின்றேன்: இதுமுதல் மனுமகன், வல்லமையுள்ள இறைவனுடைய வலது பக்கத்தில் உட்கார்ந்திருப்பதையும் வானத்தின் மேகங்கள் மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள்” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)64 அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனுஷகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். Viz kapitola |