மத்தேயு 13:44 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202244 “பரலோக அரசு, ஒரு வயலில் மறைந்து கிடக்கும் புதையலுக்கு ஒப்பாயிருக்கிறது. அதை ஒருவன் கண்டுபிடித்தபோது, அவன் அதைத் திரும்பவும் மறைத்து வைத்துவிட்டு, பின்பு போய் தனது மகிழ்ச்சியின் நிமித்தம், தன்னிடமுள்ள எல்லாவற்றையும் விற்று, அந்த வயலை வாங்குகிறான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்44 அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற புதையலுக்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு மனிதன் பார்த்து, மறைத்து, அதைப்பற்றிய மகிழ்ச்சியினாலேபோய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தை வாங்குகிறான். Viz kapitolaபரிசுத்த பைபிள்44 “பரலோக இராஜ்யம் புதைத்து வைக்கப்பட்ட செல்வத்தைப் போன்றது. புதைத்து வைக்கப்பட்ட செல்வத்தை ஒருவன் ஒருநாள் கண்டு பிடித்தான். புதையல் கிடைத்ததால் அவன் மிக மகிழ்ந்தான். மீண்டும் அவன் அச்செல்வத்தைப் புதைத்து வைத்து அந்த நிலத்தை வாங்குவதற்காகத் தன்னிடமிருந்த எல்லாவற்றையும் விற்றான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு44 “பரலோக அரசு, ஒருவன் ஒரு வயலில் மறைந்து கிடக்கும் புதையலைக் கண்டுபிடித்து, அதைத் திரும்பவும் மறைத்து வைத்ததற்கு ஒப்பாய் இருக்கின்றது. எனவே அவன் போய் தனது மனமகிழ்ச்சியின் பொருட்டு, தன்னிடமுள்ள எல்லாவற்றையும் விற்று, புதையல் உள்ள அந்த வயலை வாங்குகிறான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)44 அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப்பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக்கொள்ளுகிறான். Viz kapitola |