மத்தேயு 10:10 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 பயணத்திற்கென்று பையையோ, மாற்று உடையையோ, பாதரட்சைகளையோ, ஊன்றுகோலையோ கொண்டுபோக வேண்டாம்; ஏனெனில் வேலையாள் தன் உணவுக்குப் பாத்திரவானாயிருக்கிறான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதணிகளையாவது, தடியையாவது எடுத்துவைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்திற்குத் தகுதியுள்ளவனாக இருக்கிறான். Viz kapitolaபரிசுத்த பைபிள்10 பைகளைக் கொண்டு போகாதீர்கள். உங்கள் பயணத்திற்கு நீங்கள் அணிந்திருக்கும் உடையையும் காலணிகளையும் மட்டுமே எடுத்துச் செல்லுங்கள். ஊன்றுகோலை எடுத்துச் செல்லாதீர்கள். பணியாளனுக்குத் தேவையானவை கொடுக்கப்படவேண்டும். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு10 பயணப் பையையோ, மாற்று உடையையோ, காலணிகளையோ, கைத்தடியையோ கொண்டுபோக வேண்டாம்; ஏனெனில் வேலையாளுக்கு உரியது அவனுக்குக் கொடுக்கப்படும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதரட்சைகளையாவது, தடியையாவது தேடி வைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான். Viz kapitola |