லூக்கா 8:14 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 ஆனால் முட்செடிகளுக்குள் விழுந்த விதைகள் வார்த்தையைக் கேட்ட வேறுசிலரைக் குறிக்கிறது. அவர்கள் தங்கள் வாழ்க்கையைக் குறித்த கவலைகளினாலும், செல்வங்களினாலும், சிற்றின்பங்களினாலும், மூழ்கி நெருக்கப்பட்டு, முதிர்ச்சி அடையாதிருக்கிறார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாக இருக்கிறார்கள்; கேட்டவுடனே போய், உலகத்திற்குரிய கவலைகளினாலும் செல்வத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடுக்காமல் இருக்கிறார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்14 “முட்புதர்களின் நடுவில் விழுந்த விதை எதைக் குறிக்கிறது? அது தேவனுடைய போதனையைக்கேட்டும், கவலை, செல்வம், இவ்வாழ்வின் களிப்பு ஆகியவற்றால் அப்போதனைகளை வளரவிடாது தடுக்கப்பட்டவர்களைக் குறிக்கிறது. எனவே, அவர்கள் ஒருபோதும் நல்ல பலன் கொடுப்பதில்லை. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு14 முட்செடிகளுக்குள் விதைகள் விழுந்ததானது, வார்த்தையைக் கேட்ட மற்றும் சிலருக்கு நடந்ததைக் குறிக்கிறது. அவர்கள் தங்கள் வாழ்க்கையில், தமது சொந்த வழியில் போய்க் கொண்டிருக்கும்போது, வாழ்க்கையைக் குறித்த கவலைகளினாலும் செல்வங்களினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு முதிர்ச்சியடையாது போகின்றார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; கேட்டவுடனே போய், பிரபஞ்சத்திற்குரிய கவலைகளினாலும் ஐசுவரியத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடாதிருக்கிறார்கள். Viz kapitola |