லூக்கா 8:1 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 அதற்குப் பின்பு, இயேசு பட்டணங்கள்தோறும், கிராமங்கள்தோறும் பிரயாணம் செய்து, இறைவனுடைய அரசின் நற்செய்தியைப் பிரசங்கித்தார். அந்தப் பன்னிரண்டு பேர்களும் அவருடனே சென்றார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 பின்பு, இயேசு பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் பயணம்செய்து, தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைச் சொல்லி பிரசங்கித்து வந்தார். பன்னிரண்டு சீடர்களும் அவரோடு இருந்தார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்1 மறுநாள் இயேசு சில பெரிய பட்டணங்களுக்கும், சில சிறு நகரங்களுக்கும் பிரயாணம் செய்தார். தேவனின் இராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை இயேசு கூறி மக்களுக்குப் போதித்தார். பன்னிரண்டு சீஷர்களும் அவரோடு கூட இருந்தனர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 அதன்பின், இயேசு பட்டணம் பட்டணமாக, கிராமம் கிராமமாகப் பிரயாணம் செய்து, இறைவனுடைய அரசைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தார். அந்தப் பன்னிரண்டு பேரும் அவருடனே போனார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 பின்பு, அவர் பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் பிரயாணம்பண்ணி, தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைக் கூறிப் பிரசங்கித்துவந்தார். பன்னிருவரும் அவருடனேகூட இருந்தார்கள். Viz kapitola |