லூக்கா 23:25 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202225 எனவே, அவர்கள் கேட்டுக்கொண்டபடியே, கிளர்ச்சி செய்ததற்காகவும், கொலைசெய்ததற்காகவும் சிறையில் போடப்பட்டிருந்த பரபாஸை பிலாத்து விடுதலை செய்தான்; இயேசுவையோ, அவர்கள் விருப்பத்தின்படி செய்வதற்காக ஒப்படைத்தான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்25 கலவரத்தினிமித்தமும் கொலைக் குற்றத்தினிமித்தமும் காவலில் போடப்பட்டிருந்த பரபாசை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலையாக்கி, இயேசுவையோ அவர்கள் விருப்பத்திற்கு ஒப்புக்கொடுத்தான். Viz kapitolaபரிசுத்த பைபிள்25 மக்கள் அனைவரும் பரபாஸ் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று விரும்பினர். கலகம் விளைவித்ததற்காகவும் மக்களைக் கொன்றதற்காகவும் பரபாஸ் சிறையில் இருந்தான். பிலாத்து பரபாஸை விடுவித்தான். கொல்லப்படும்பொருட்டு, இயேசுவை மக்களிடம் பிலாத்து ஒப்படைத்தான். மக்களும் அதையே விரும்பினர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு25 எனவே, அவர்கள் கேட்டுக் கொண்டபடி, கிளர்ச்சி செய்ததற்காகவும் கொலை செய்ததற்காகவும் சிறையில் போடப்பட்டிருந்த பரபாஸ் என்பவனை விடுதலை செய்தான்; இயேசுவையோ அவர்களுடைய விருப்பப்படி செய்ய ஒப்படைத்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)25 கலகத்தினிமித்தமும் கொலைபாதகத்தினிமித்தமும் காவலில் போடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலையாக்கி, இயேசுவையோ அவர்கள் இஷ்டத்துக்கு ஒப்புக்கொடுத்தான். Viz kapitola |