லூக்கா 15:4 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 “உங்களில் ஒருவனிடம் நூறு ஆடுகள் இருந்து, அவற்றில் ஒன்று காணாமல் போனால், அவன் தனது தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பத்திரமான இடத்தில் விட்டுவிட்டு, காணாமல் போன ஆட்டைக் கண்டுபிடிக்கும்வரைக்கும், அதைத் தேடிப்போவான் அல்லவா? Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 உங்களில் ஒரு மனிதன் நூறு ஆடுகளை உடையவனாக இருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்திரத்திலேவிட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்கும்வரை தேடித்திரியானோ? Viz kapitolaபரிசுத்த பைபிள்4 “உங்களில் ஒருவனுக்கு நூறு ஆடுகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அவற்றுள் ஒன்று காணாமல் போகிறது. அப்போது அவன் மற்ற தொண்ணூற்று ஒன்பது ஆடுகளையும் தனியே விட்டுவிட்டுக் காணாமல் போன ஆட்டைத் தேடிச் செல்லமாட்டானா? அந்தக் காணாமல் போன ஆட்டைக் கண்டுபிடிக்கும்வரைக்கும் அவன் அதைத் தேடிக்கொண்டே இருப்பான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 “உங்களில் ஒருவனிடம் நூறு செம்மறியாடுகள் இருந்து, அவற்றில் ஒன்று காணாமற் போனால், அவன் தனது தொண்ணூற்றொன்பது செம்மறியாடுகளையும் பாதுகாப்பான ஒரு வெளியிடத்தில் விட்டுவிட்டு, காணாமற் போன செம்மறியாட்டைக் கண்டுபிடிக்கும் வரைக்கும், அதைத் தேடிப் போவான் அல்லவா? Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலேவிட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ? Viz kapitola |