Online Bible

- Reklamy -




புலம்பல் 2:9 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

9 எருசலேமின் வாசல்கள் நிலத்திற்குள்ளே புதைந்து கிடக்கின்றன; அவைகளின் தாழ்ப்பாள்களை அவர் உடைத்து அழித்துவிட்டார். அவளுடைய அரசனும், அவளுடைய இளவரசர்களும் நாடுகளுக்கு நடுவே நாடுகடத்தப்பட்டிருக்கிறார்கள். சட்டம் இல்லாமற்போயிற்று. அவளுடைய இறைவாக்கு உரைப்போருக்கு யெகோவாவிடமிருந்து தரிசனங்கள் கிடைப்பதில்லை.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

9 எருசலேம் பட்டணத்து வாசல்கள் தரையில் புதைந்துகிடக்கிறது; அவளுடைய தாழ்ப்பாள்களை உடைத்துப்போட்டார்; அவளுடைய ராஜாவும் அவளுடைய பிரபுக்களும் அந்நியமக்களுக்குள் இருக்கிறார்கள்; வேதமுமில்லை; அவளுடைய தீர்க்கதரிசிகளுக்குக் யெகோவாவால் தரிசனம் கிடைப்பதில்லை.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

9 எருசலேமின் வாசல்கள் தரையில் அமிழ்ந்துகிடந்தன. அவர் அதன் தாழ்ப்பாள்களை உடைத்து நொறுக்கிப்போட்டார். அவரது ராஜா மற்றும் இளவரசர்கள் அயல் நாடுகளில் இருக்கிறார்கள். அங்கே அவர்களுக்கு இனி வேறு போதனைகள் எதுவுமில்லை. எருசலேமின் தீர்க்கதரிசிகளும் கூட கர்த்தரிடமிருந்து எந்தவிதமான தரிசனத்தையும் பெறவில்லை.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

9 அவள் வாசல்கள் தரையில் அமிழ்ந்திக்கிடக்கிறது; அவள் தாழ்ப்பாள்களை முறித்து உடைத்துப்போட்டார்; அவள் ராஜாவும் அவள் பிரபுக்களும் புறஜாதியாருக்குள் இருக்கிறார்கள்; வேதமுமில்லை; அவள் தீர்க்கதரிசிகளுக்குக் கர்த்தரால் தரிசனம் கிடைக்கிறதுமில்லை.

Viz kapitola kopírovat




புலம்பல் 2:9

Následuj nás:

Reklamy


Reklamy