எரேமியா 33:26 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202226 யாக்கோபின் வம்சத்தையும், என் தாசனாகிய தாவீதையும் நான் நிராகரிப்பேன். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களின் சந்ததிகளை அரசாளுவதற்கு, தாவீதினுடைய மகன்களில் ஒருவனையும் நான் தெரிந்துகொள்ளவும் மாட்டேன். ஆனால் நானோ அவர்களுடைய செல்வங்கள் யாவற்றையும் திரும்பக் கொடுத்து, அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன்’ என்கிறார்” என்றான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்26 அப்பொழுது நான் யாக்கோபின் சந்ததியையும், என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் தள்ளி, நான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களின் சந்ததியை ஆளத்தகுதியானவர்களை அதிலிருந்து எடுக்காமல் வெறுத்துவிடுவேன்; அவர்களுடைய சிறையிருப்பை நான் திருப்பி, அவர்களுக்கு இரங்குவேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றார். Viz kapitolaபரிசுத்த பைபிள்26 பிறகு, யாக்கோபின் சந்ததிகளிடமிருந்து நான் ஒருவேளை விலகலாம். ஒருவேளை ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபின் சந்ததிகளையும் தாவீதின் சந்ததிகளையும் அனுமதிக்கமாட்டேன். ஆனால் தாவீது எனது தாசன். நான் அந்த ஜனங்களிடம் தயவோடு இருப்பேன். அந்த ஜனங்களுக்கு மீண்டும் நல்லவை ஏற்படச் செய்வேன்.” Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)26 அப்பொழுது நான் யாக்கோபின் சந்ததியையும், என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் தள்ளி, நான் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களின் சந்ததியை ஆளத்தக்கவர்களை அதிலிருந்து எடுக்காதபடிக்கு வெறுத்துப்போடுவேன்; அவர்களுடைய சிறையிருப்பை நான் திருப்பி, அவர்களுக்கு இரங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார். Viz kapitola |