எரேமியா 31:13 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 அப்பொழுது இளம்பெண்களும், வாலிபரும், முதியோருங்கூட நடனமாடி மகிழ்வார்கள். நான் அவர்களுடைய துக்கத்தை மகிழ்ச்சியாக மாற்றுவேன். துயரத்திற்குப் பதிலாக ஆறுதலையும், மகிழ்ச்சியையும் நான் அவர்களுக்குக் கொடுப்பேன். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 அப்பொழுது கன்னிகைகளும், வாலிபரும், முதியோருடன் ஆனந்தக்களிப்பாய் மகிழுவார்கள்; நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன். Viz kapitolaபரிசுத்த பைபிள்13 பிறகு இஸ்ரவேலின் இளம் பெண்கள் மகிழ்வார்கள், நடனம் ஆடுவார்கள். அந்த ஆட்டத்தில் இளம் ஆண்களும் முதிய ஆண்களும் கலந்துக்கொள்வார்கள். நான் அவர்களது சோகத்தை மகிழ்ச்சியாக மாற்றுவேன். இஸ்ரவேல் ஜனங்களுக்கு நான் ஆறுதல் செய்வேன். நான் அவர்களது சோகத்தை மகிழ்ச்சியாக மாற்றுவேன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 அப்பொழுது கன்னிகைகளும், வாலிபரும், முதியோருங்கூட ஆனந்தக்களிப்பாய் மகிழுவார்கள்; நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன். Viz kapitola |