யாக்கோபு 5:7 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 ஆகையால் பிரியமானவர்களே, கர்த்தருடைய வருகைவரைக்கும் பொறுமையுள்ளவர்களாக இருங்கள். இதோ, நிலம் அதன் மதிப்புமிக்க விளைச்சலைக் கொடுக்கும்வரைக்கும் பயிரிடுகிறவன் எவ்வளவாய் காத்திருக்கிறான். அவன் கோடை மழைக்காகவும், மாரி மழைக்காகவும் எவ்வளவு பொறுமையாகக் காத்திருக்கிறான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 இப்படியிருக்க, சகோதரர்களே, கர்த்தருடைய வருகைவரை நீடிய பொறுமையாக இருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்கனியை அடையவேண்டும் என்று, முன்மாரியும், பின்மாரியும் வரும்வரை, நீடிய பொறுமையோடு காத்திருக்கிறான். Viz kapitolaபரிசுத்த பைபிள்7 சகோதர சகோதரிகளே, பொறுமையாக இருங்கள். கர்த்தராகிய இயேசு வருவார். காலம் வரும்வரை பொறுமையாக இருங்கள். ஒரு விவசாயி தன் பயிர் வளர்ந்து அறுவடையாகும்வரை காத்திருக்கிறான். தன் பயிருக்காக வேண்டி முதல் மழைக்கும் இறுதி மழைக்கும் அவன் மிகப் பொறுமையாக காத்திருக்கிறான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 ஆகையால் பிரியமானவர்களே! ஆண்டவருடைய வருகை வரைக்கும் பொறுமையாயிருங்கள். பாருங்கள்! பயிரிடுகின்றவன் நிலத்திலிருந்து பெருமதிப்புள்ள சிறப்பான நல்ல விளைச்சலை பெற்றுக்கொள்ள பருவத்துக்கு முந்திய மழைக்காகவும் பருவ மழைக்காகவும் பொறுமையோடு காத்திருக்கிறான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான். Viz kapitola |