ஏசாயா 66:3 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 காளையைப் பலியிடுகிறவர் மனிதனைக் கொல்லுகிறவராகவும், செம்மறியாட்டுக் குட்டியைப் பலியிடுகிறவர் நாயின் கழுத்தை முறிப்பவராகவும், தானியபலி செலுத்துகிறவர் பன்றியின் இரத்தத்தைப் படைப்பவராகவும், நினைவுப் படையலாகிய தூபங்காட்டுதலைச் செய்கிறவர் விக்கிரகத்தை வணங்குபவராகவும் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் சொந்த வழிகளைத் தெரிந்துகொள்கிறார்கள், அவர்களுடைய ஆத்துமா அவர்களுடைய அருவருப்புகளில் மகிழ்ச்சியாயிருக்கின்றன. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 மாட்டை வெட்டுகிறவன் மனிதனைக் கொல்லுகிறவனாகவும், ஆட்டைப் பலியிடுகிறவன் நாயைக் கழுத்தறுக்கிறவனாகவும், காணிக்கையைப் படைக்கிறவன் பன்றி இரத்தத்தைப் படைக்கிறவனாகவும், தூபங்காட்டுகிறவன் சிலையை போற்றுகிறவனாகவும் இருக்கிறான்; இவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்துகொள்ளுகிறார்கள்; இவர்களுடைய ஆத்துமா தங்கள் அருவருப்புகளின்மேல் விருப்பமாயிருக்கிறது. Viz kapitolaபரிசுத்த பைபிள்3 சில ஜனங்கள் காளைகளைப் பலியிடுகிறார்கள். ஆனால், அவர்கள் ஜனங்களையும் அடிக்கிறார்கள். அந்த ஜனங்கள் ஆடுகளைப் பலியாகக் கொடுக்கிறார்கள். ஆனால், அவர்கள் நாய்களின் கழுத்துகளையும் உடைக்கிறார்கள். அவர்கள் பன்றியின் இரத்தத்தையும் எனக்கு பலியாகச் செலுத்துகிறார்கள். அந்த ஜனங்கள் நறுமணப் பொருட்களை எரிக்க நினைவுகொள்வார்கள். ஆனால், அவர்கள் தமது பயனற்ற விக்கிரகங்களை நேசிக்கிறார்கள். அவர்கள் எனது வழியை அல்ல. தங்கள் சொந்த வழியையே தேர்ந்து எடுப்பார்கள். அவர்கள் தங்களது பயங்கரமான விக்கிரகங்களை நேசிக்கிறார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 மாட்டை வெட்டுகிறவன் மனுஷனைக் கொல்லுகிறவனாகவும், ஆட்டைப் பலியிடுகிறவன் நாயைக் கழுத்தறுக்கிறவனாகவும், காணிக்கையைப் படைக்கிறவன் பன்றி இரத்தத்தைப் படைக்கிறவனாகவும், தூபங்காட்டுகிறவன் விக்கிரகத்தை ஸ்தோத்திரிக்கிறவனாகவும் இருக்கிறான்; இவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்துகொள்ளுகிறார்கள்; இவர்களுடைய ஆத்துமா தங்கள் அருவருப்புகளின்மேல் விருப்பமாயிருக்கிறது. Viz kapitola |