ஏசாயா 66:15 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 இதோ, யெகோவா நெருப்புடன் வருகிறார், அவருடைய தேர்கள் சுழல்காற்றைப்போல் விரைகின்றன; அவர் தம் கோபத்தை மூர்க்கமாகவும் தமது கண்டனத்தை நெருப்பு ஜுவாலையாகவும் கொண்டுவருவார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 இதோ, தம்முடைய கோபத்தை கடுங்கோபமாகவும், தம்முடைய கடிந்துகொள்ளுதலை நெருப்புத்தழலாகவும் செலுத்தக் யெகோவா அக்கினியுடனும் வருவார், பெருங்காற்றைப்போன்ற தம்முடைய இரதங்களுடனும் வருவார். Viz kapitolaபரிசுத்த பைபிள்15 பாருங்கள், கர்த்தர் நெருப்போடு வந்துகொண்டிருக்கிறார். கர்த்தருடைய படைகள் புழுதி மேகங்களோடு வந்துகொண்டிருக்கிறார்கள். கர்த்தர் அந்த ஜனங்களைத் தனது கோபத்தால் தண்டிப்பார். கர்த்தர் நெருப்பின் ஜீவாலையைப் பயன்படுத்தி, அவர் கோபமாக இருக்கையில் அந்த ஜனங்களைத் தண்டிப்பார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 இதோ, தம்முடைய கோபத்தை உக்கிரமாகவும், தம்முடைய கடிந்துகொள்ளுதலை அக்கினிஜூவாலையாகவும் செலுத்தக் கர்த்தர் அக்கினியோடும் வருவார், பெருங்காற்றைப்போன்ற தம்முடைய இரதங்களோடும் வருவார். Viz kapitola |