ஏசாயா 63:3 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 “நான் தனியாய் திராட்சைப் பிழியும் ஆலையை மிதித்தேன்; மக்கள் கூட்டங்களில் ஒருவனும் என்னுடன் இருந்ததில்லை. அவர்களை என் கோபத்தில் மிதித்து, என் கடுங்கோபத்தில் அவர்களை நசுக்கினேன்; அவர்களுடைய இரத்தம் என் ஆடைகளின்மேல் தெறித்தது, என் உடைகளெல்லாம் கறைப்பட்டன. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 நான் தனி ஒருவனாக ஆலையை மிதித்தேன்; மக்களில் ஒருவனும் என்னோடிருந்ததில்லை; நான் என் கோபத்திலே அவர்களை மிதித்து, என் கடுங்கோபத்திலே அவர்களை நசுக்கிப்போட்டேன்; அதினால் அவர்கள் இரத்தம் என் ஆடைகளின்மேல் தெறித்தது, என் ஆடைகளையெல்லாம் கறைப்படுத்திக்கொண்டேன். Viz kapitolaபரிசுத்த பைபிள்3 அவன் பதில் கூறுகிறான், “நான் திராட்சைரச ஆலை வழியாக நடந்தேன். எவரும் எனக்கு உதவவில்லை. நான் கோபமாக இருக்கிறேன். நான் திராட்சைகளுக்குமேல் நடந்தேன். அதன் சாறு என் ஆடைகள் மேல் தெளித்தது. எனவே, எனது ஆடைகள் அழுக்காக உள்ளன. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 நான் ஒருவனாய் ஆலையை மிதித்தேன்; ஜனங்களில் ஒருவனும் என்னோடிருந்ததில்லை; நான் என் கோபத்திலே அவர்களை மிதித்து, என் உக்கிரத்திலே அவர்களை நசுக்கிப்போட்டேன்; அதினால் அவர்கள் இரத்தம் என் வஸ்திரங்களின்மேல் தெறித்தது, என் உடுப்பையெல்லாம் கறைப்படுத்திக்கொண்டேன். Viz kapitola |