ஏசாயா 43:2 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 நீ தண்ணீரைக் கடக்கும்போது, நான் உன்னுடன் இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது, அவை உன்னை அள்ளிக்கொண்டு போகாது; நீ நெருப்பில் நடக்கும்போதும் எரிந்து போகமாட்டாய். நெருப்பு சுவாலை உன்னை எரித்துப்போடாது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ நெருப்பில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; நெருப்புத்தழல் உன்னை சுட்டெரிக்காது. Viz kapitolaபரிசுத்த பைபிள்2 உனக்குத் தொல்லைகள் இருக்கும்போது நான் உன்னோடு இருக்கிறேன். நீ ஆறுகளைக் கடக்கும்போது, நீ பாதிக்கப்படமாட்டாய். நீ நெருப்பினூடே நடக்கும்போது, நீ எரிக்கப்படமாட்டாய். நெருப்புச் ஜூவாலைகள் உன்னைப் பாதிக்காது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜூவாலை உன்பேரில் பற்றாது. Viz kapitola |