ஏசாயா 42:15 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 நான் மலைகளையும், குன்றுகளையும் பாழாக்குவேன், அவைகளிலுள்ள தாவரங்களையும் வாடிப்போகப் பண்ணுவேன். ஆறுகளைத் தீவுகளாக மாற்றி, குளங்களையும் வற்றப்பண்ணுவேன். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 நான் மலைகளையும் குன்றுகளையும் பாழாக்கி, அவைகளிலுள்ள தாவரங்களையெல்லாம் வாடச்செய்து, ஆறுகளைத் திட்டுகளாக்கி, ஏரிகளை வற்றிப்போகச்செய்வேன். Viz kapitolaபரிசுத்த பைபிள்15 நான் மலைகளையும் குன்றுகளையும் அழிப்பேன். நான் அங்கே வளருகின்ற தாவரங்களை வாடச் செய்வேன். நான் ஆறுகளை வறண்ட நிலமாக்குவேன். நான் தண்ணீருள்ள குளங்களையும் வறளச் செய்வேன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 நான் மலைகளையும் குன்றுகளையும் பாழாக்கி, அவைகளிலுள்ள பூண்டுகளையெல்லாம் வாடப்பண்ணி, ஆறுகளைத் திட்டுகளாக்கி, ஏரிகளை வற்றிப்போகப்பண்ணுவேன். Viz kapitola |