ஏசாயா 41:17 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202217 “ஏழைகளும், எளியவர்களும் தண்ணீரைத் தேடுவார்கள்; ஆனால் அங்கு ஒன்றுமிராது. அவர்களின் நாவுகள் தாகத்தினால் வறண்டுபோகும். ஆனால் யெகோவாவாகிய நான் அவர்களுக்குப் பதிலளிப்பேன்; இஸ்ரயேலின் இறைவனாகிய நான் அவர்களைக் கைவிடமாட்டேன். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்17 சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடைக்காமல், அவர்கள் நாக்கு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன். Viz kapitolaபரிசுத்த பைபிள்17 “ஏழ்மையும் தேவையும் கொண்ட ஜனங்கள் தண்ணீருக்காக அலைவார்கள். ஆனால் அவர்கள் எதையும் கண்டுகொள்ளமாட்டார்கள். அவர்கள் தாகமாக இருக்கிறார்கள். அவர்களின் நாக்கு உலர்ந்துபோயிற்று. அவர்களின் ஜெபத்திற்கு இஸ்ரவேலின் தேவனும் கர்த்தருமாகிய நான் பதில் சொல்வேன். நான் அவர்களை விடமாட்டேன். அவர்கள் மரிக்கவும் விடமாட்டேன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)17 சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன். Viz kapitola |