ஏசாயா 30:6 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 நெகேவ் பாலைவனத்தின் மிருகங்களைப் பற்றிய இறைவாக்கு: பெண் சிங்கங்களும், ஆண்சிங்கங்களும், விரியன் பாம்பும், பறக்கும் பாம்பும் இருக்கின்ற, துன்பமும் வேதனையுமுள்ள நாட்டின் வழியாகத் தூதுவர் போகிறார்கள். அவர்கள் தமது செல்வங்களைக் கழுதைகள்மேலும், திரவியங்களை ஒட்டகங்கள்மேலும் ஏற்றிக்கொண்டு, பயனற்ற நாட்டவரிடம் போகிறார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 தெற்கேபோகிற மிருகங்களின் செய்தி. கொடிய சிங்கமும், கிழச்சிங்கமும், விரியனும், பறக்கிற கொள்ளிவாய்ச்சர்ப்பமும் வருகிறதும், நெருக்கமும் இடுக்கமும் அடைவிக்கிறதுமான தேசத்திற்கு, அவர்கள் கழுதை குட்டிகளுடைய முதுகின்மேல் தங்கள் ஆஸ்திகளையும், ஒட்டகங்களுடைய முதுகின்மேல் தங்கள் பொக்கிஷங்களையும், தங்களுக்கு உதவாத மக்களிடத்திற்கு ஏற்றிக்கொண்டுபோகிறார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்6 வனாந்திரத்தில் உள்ள மிருகங்களைப் பற்றிய துக்க செய்தி: வனாந்திரம் ஒரு ஆபத்தான இடம். இப்பூமியில் சிங்கங்களும் விஷப் பாம்புகளும் வேகமாகச் செல்லும் பாம்புகளும் நிறைந்துள்ளன. ஆனால் சில ஜனங்கள் எகிப்துக்குப்போகிறவர்கள் இதின் வழியாகப் பயணம் செய்வார்கள். அவர்கள் தங்கள் செல்வங்களைக் கழுதையின் முதுகில் ஏற்றிக்கொண்டுசெல்வார்கள். ஒட்டகங்களின் முதுகில் தங்கள் பொக்கிஷங்களை வைத்திருப்பார்கள். இதற்குப் பொருள், ஜனங்கள் தமக்கு உதவ முடியாத ஜனத்தையே சார்ந்துகொண்டிருக்கிறார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 தெற்கேபோகிற மிருகஜீவன்களின் பாரம். துஷ்டசிங்கமும், கிழச்சிங்கமும், விரியனும், பறக்கிற கொள்ளிவாய்ச்சர்ப்பமும் வருகிறதும், நெருக்கமும் இடுக்கமும் அடைவிக்கிறதுமான தேசத்துக்கு, அவர்கள் கழுதை மறிகளுடைய முதுகின்மேல் தங்கள் ஆஸ்திகளையும், ஒட்டகங்களுடைய முதுகின்மேல் தங்கள் பொக்கிஷங்களையும், தங்களுக்கு உதவாத ஜனத்தண்டைக்கு ஏற்றிக்கொண்டுபோகிறார்கள். Viz kapitola |