ஏசாயா 28:1 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 எப்பிராயீமிலுள்ள குடிவெறியரின் பெருமையான கிரீடத்திற்கு ஐயோ கேடு! அதன் மகிமையின் அழகான வாடும் மலருக்கு ஐயோ கேடு! செழிப்பான பள்ளத்தாக்கின் முகப்பில் இருக்கின்ற பட்டணத்திற்கு ஐயோ கேடு! மதுவால் வெறியுண்டு வீழ்ச்சியடைந்தவர்களின் பெருமையாகிய அந்த பட்டணத்திற்கும் ஐயோ கேடு! Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 எப்பிராயீமுடைய வெறியரின் பெருமையான கிரீடத்திற்கு ஐயோ, மதுபானத்தால் மயக்கமடைந்தவர்களின் செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பு வாடிப்போகும் பூவே! Viz kapitolaபரிசுத்த பைபிள்1 சமாரியாவைப் பாருங்கள்! எப்பிராயீமின் குடிகார ஜனங்கள் அந்நகரைப்பற்றித் தற்பெருமை கொள்கிறார்கள். மலைக்கு மேலே வளமான பள்ளாத்தாக்கு சூழ இருக்கிறது. சமாரியா ஜனங்கள் தம் நகரத்தை அழகான பூக்களாலான கிரீடம் என்று நினைத்திருக்கின்றனர். ஆனால், அவர்கள் திராட்சைரசத்தைக் குடித்துக்கொண்டிருக்கின்றனர். இந்த “அழகான கிரீடமானது” வாடிப்போகும் செடிபோல் உள்ளது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 எப்பிராயீமுடைய வெறியரின் பெருமையான கிரீடத்துக்கு ஐயோ, மதுபானத்தால் மயக்கமடைந்தவர்களின் செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பு வாடிப்போகும் புஷ்பமே! Viz kapitola |