ஏசாயா 25:5 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 அது பாலைவன வெப்பத்தைப் போலவும் இருக்கிறது. அந்நியரின் ஆர்ப்பாட்டத்தை நீர் அடக்குகிறீர்; மேகத்தின் நிழலால் வெப்பம் தணிவதுபோல, இரக்கமற்றோரின் பாடலும் அடங்கிப் போகிறது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 வறட்சியான இடத்தின் வெப்பம் மேகத்தினால் தணிவதுபோல், அந்நியரின் மும்முரத்தைத் தணியச்செய்வீர்; மேகத்தின் நிழலினால் வெயில் தணிகிறதுபோல் பெலவந்தரின் ஆரவாரம் தணியும். Viz kapitolaபரிசுத்த பைபிள்5 பகைவன் சத்தமிட்டு ஆரவாரத்தை ஏற்படுத்துவான். பயங்கர பகைவன் சத்தமிட்டு சவால்விடுவான். ஆனால் தேவனாகிய நீர் அவர்களைத் தடுப்பீர். கோடை காலத்தில் வனாந்தரத்தில் செடிகள் வாடி தரையில் விழும். அடர்த்தியான மேகங்கள் கோடை வெப்பத்தைத் தடுக்கும். அதே வழியில், நீர் பயங்கரமான பகைவர்களின் சத்தங்களை நிறுத்துவீர். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 வறட்சியான இடத்தின் காங்கை மேகத்தினால் தணிவதுபோல், அந்நியரின் மும்முரத்தைத் தணியப்பண்ணுவீர்; மேகத்தின் நிழலினால் வெயில் தணிகிறதுபோல் பெலவந்தரின் ஆரவாரம் தணியும். Viz kapitola |