ஏசாயா 14:8 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 தேவதாரு மரங்களும், லெபனோனின் கேதுரு மரங்களும், உன் வீழ்ச்சியில் மகிழ்ந்து சொல்கிறதாவது: “பாபிலோனே, நீ கீழே வீழ்த்தித் தள்ளப்பட்டிருக்கிறாய். அதனால் இப்பொழுது எங்களை ஒரு மரவெட்டியும் அணுகவில்லை.” Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 தேவதாரு மரங்களும், லீபனோனின் கேதுருக்களும், உனக்காக சந்தோஷப்பட்டு, நீ விழுந்து கிடந்தது முதற்கொண்டு எங்களை வெட்டவருவார் ஒருவரும் இல்லை என்று சொல்கிறது. Viz kapitolaபரிசுத்த பைபிள்8 நீ தீய ராஜாவாக இருந்தாய். இப்பொழுது நீ முடிந்து போனாய். பைன் மரங்களும் கூட மகிழ்ச்சியாய் உள்ளன. லீபனோனில் உள்ள கேதுரு மரங்களும் மகிழ்ச்சியாய் உள்ளது. “ராஜா எங்களை வெட்டிச் சாய்த்தான். ஆனால் இப்பொழுது ராஜாவே விழுந்துவிட்டான். அவன் இனி ஒருபோதும் நிற்கமாட்டான்” என்று மரங்கள் சொல்கின்றன. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 தேவதாரு விருட்சங்களும், லீபனோனின் கேதுருக்களும், உன்னிமித்தம் சந்தோஷப்பட்டு, நீ விழுந்து கிடந்தது முதற்கொண்டு எங்களை வெட்டவருவார் ஒருவரும் இல்லை என்று சொல்லுகிறது. Viz kapitola |