ஓசியா 13:15 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 இவன் சகோதரரின் மத்தியில் செழித்தோங்கி இருப்பினும், யெகோவாவிடமிருந்து ஒரு கீழ்க்காற்று பாலைவனத்திலிருந்து பலமாக வீசும். அப்பொழுது உனது நீரூற்று வறண்டு, கிணறுகள் காய்ந்து போகும். உனது களஞ்சியத்திலிருந்து உனது திரவியங்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்படும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 இவன் சகோதரர்களுக்குள்ளே மக்கள் பெருத்தவனாயிருந்தாலும், யெகோவாவுடைய காற்றாகிய கீழ்க்காற்று வனாந்தரத்திலிருந்து எழும்பிவரும்; அதனால் அவனுடைய ஊற்றுகள் வற்றிப்போகும்; அவனுடைய கிணறு சுரக்காமல் வற்றிப்போகும்; அது விரும்பப்படத்தக்க சகல பொருட்களுள்ள விலையுயர்ந்த பொருட்களையும் கொள்ளையடித்துக்கொண்டுபோகும். Viz kapitolaபரிசுத்த பைபிள்15 இஸ்ரவேல் தனது சகோதரர்களுக்கிடையில் வளர்கிறான். ஆனால் வல்லமை மிக்க கிழக்குக் காற்று வரும். கர்த்தருடைய காற்று வனாந்தரத்திலிருந்து வீசும். பிறகு இஸ்ரவேலின் கிணறுகள் வறண்டுபோகும். அதன் நீரூற்றுகள் வற்றிப்போகும். இஸ்ரவேலின் விலைமதிப்புள்ள எல்லாவற்றையும் காற்று அடித்துக்கொண்டு போகும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 இவன் சகோதரருக்குள்ளே ஜனம் பெருத்தவனாயிருந்தாலும், கர்த்தருடைய காற்றாகிய கீழ்க்காற்று வனாந்தரத்திலிருந்து எழும்பிவரும்; அதனால் அவனுடைய ஊற்றுகள் வற்றிப்போகும்; அவனுடைய துரவு சுவறிப்போகும்; அது இச்சிக்கப்படத்தக்க சகல பதார்த்தங்களுள்ள உத்தம பதார்த்தங்களையும் வாரிக்கொண்டுபோகும். Viz kapitola |