எபிரெயர் 7:8 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 ஆசாரியர்களைப் பொறுத்தவரையில், இவர்கள் இறந்துபோகிறவர்களாக இருந்தும், பத்தில் ஒரு பங்கைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் மெல்கிசேதேக்கைப் பொறுத்தவரையிலோ, இவன் என்றும் வாழ்கிறவன் என அறிவிக்கப்பட்டு, பத்தில் ஒரு பங்கைப் பெற்றுக்கொண்டான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 அன்றியும், இங்கே, தசமபாகம் வாங்குகிற மனிதர்கள் ஒருநாளில் மரித்துப்போவார்கள்; அங்கேயோ, ஆபிரகாமிடம் தசமபாகத்தைப் பெற்றுக்கொண்டவன், உயிரோடு இருப்பவன் என்று சாட்சிபெற்றவன். Viz kapitolaபரிசுத்த பைபிள்8 ஒரு புறத்தில் வாழ்ந்து மடிகிற ஆசாரியர்களால் பத்தில் ஒரு பாகம் வசூலிக்கப்படுகிறது. இன்னொரு புறத்தில் இன்னும் உயிருடன் இருப்பதாகச் சொல்லப்படுகிற மெல்கிசேதேக்கால் பத்தில் ஒரு பாகம் வசூலிக்கப்படுகிறது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 மதகுருக்களைப் பொறுத்தவரையில், அவர்கள் இறந்து போகின்றவர்களாக இருந்தும் பத்தில் ஒரு பங்கைப் பெற்றுக்கொள்கின்றார்கள். ஆனால் மெல்கிசேதேக்கைப் பொறுத்தவரையிலோ, இவர் என்றும் வாழ்கின்றவர் என அறிவிக்கப்பட்டு பத்தில் ஒரு பங்கைப் பெற்றுக்கொண்டார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 அன்றியும், இங்கே, மரிக்கிற மனுஷர்கள் தசமபாகம் வாங்குகிறார்கள்; அங்கேயோ, பிழைத்திருக்கிறான் என்று சாட்சிபெற்றவன் வாங்கினான். Viz kapitola |