எபிரெயர் 4:13 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 படைப்பு எல்லாவற்றிலும் எதுவும் இறைவனின் பார்வையிலிருந்து மறைவாய் இருப்பதில்லை. எல்லாம் அவருடைய கண்களுக்கு முன்பாக மறைக்கப்படாமலும், வெளியரங்கமாக்கப்பட்டும் இருக்கின்றன. அவருக்கே நாம் செய்த எல்லாவற்றிற்கும் கணக்குக் கொடுக்கவேண்டும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 அவருடைய பார்வைக்கு மறைவான படைப்பு ஒன்றும் இல்லை; எல்லாம் அவருடைய கண்களுக்குமுன்பாக மறைக்கப்படாததாகவும், வெளிப்படையாகவும் இருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும். Viz kapitolaபரிசுத்த பைபிள்13 தேவனிடமிருந்து எதுவும் மறைக்கப்படவில்லை. அனைத்தையும் அவரால் தெளிவாகக் காணமுடியும். அவருக்கு முன் எல்லாமே திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. நாம் வாழ்ந்த முறையை அவரிடம் விவரிக்க வேண்டும். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 அத்துடன் படைக்கப்பட்ட எந்த ஒரு உயிரினமும் அவருடைய பார்வையில் இருந்து மறைக்கப்படவில்லை. நாம் செய்த எல்லாவற்றிற்கும் நாம் இறைவனிடம் கணக்குக் கொடுக்க வேண்டியுள்ளது. அவரது கண்களுக்கு முன்பாக எதுவுமே மறைக்கப்படாமலும் எல்லாமே பகிரங்கமாயும் இருக்கின்றன. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய, கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும். Viz kapitola |