எபிரெயர் 10:22 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202222 நாம் குற்றமனசாட்சி நீக்கப்பட்ட, சுத்த இருதயத்துடனும், சுத்தமான தண்ணீரினால் கழுவப்பட்ட உடலுடனும், பரிபூரண விசுவாசமுள்ள உண்மையான உள்ளத்துடனும், இறைவனை அணுகி சேருவோமாக. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்22 தீயமனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயம் உள்ளவர்களாகவும், சுத்த தண்ணீரினால் கழுவப்பட்ட சரீரம் உள்ளவர்களாகவும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம். Viz kapitolaபரிசுத்த பைபிள்22 நாம் சுத்தப்படுத்தப்பட்டு குற்ற உணர்விலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறோம். நமது சரீரங்கள் பரிசுத்த நீரால் கழுவப்பட்டுள்ளன. எனவே உண்மையான இதயத்தோடும், விசுவாசம் நமக்களிக்கிற உறுதியோடும் தேவனை நெருங்கி வாருங்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு22 இரத்தம் தெளிக்கப்பட்டதால், நமது இருதயத்திலிருந்து குற்ற மனசாட்சி நீக்கப்பட்ட சுத்த இருதயமும் சுத்தமான தண்ணீரினால் கழுவப்பட்ட உடலும் கொண்டவர்களாக, உண்மை உள்ளத்துடன் பரிபூரண விசுவாசத்தோடு இறைவனை அணுகிச் சேருவோமாக. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)22 துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம். Viz kapitola |