ஆபகூக் 3:13 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 உமது மக்களை விடுதலை செய்யவும், அபிஷேகம் செய்யப்பட்டவரை காப்பாற்றவுமே நீர் வந்தீர். நீர் கொடுமை நிறைந்த நாட்டின் தலைவனை தாக்கினீர். நீர் அவனைத் தலையிலிருந்து கால்வரைக்கும் தண்டித்தீர். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 உமது மக்களின் பாதுகாப்பிற்காகவும் நீர் அபிஷேகம்செய்தவனின் பாதுகாப்பிற்காகவுமே நீர் புறப்பட்டீர்; கழுத்தளவாக அஸ்திபாரத்தைத் திறப்பாக்கி, தீயவனுடைய வீட்டிலிருந்த தலைவனை வெட்டினீர்; (சேலா) Viz kapitolaபரிசுத்த பைபிள்13 நீர் உமது ஜனங்களைக் காப்பாற்ற வந்தீர். நீர் தேர்ந்தெடுத்த ராஜாவை வெற்றி நோக்கி நடத்த வந்தீர். ஒவ்வொரு தீமை செய்கிற குடும்பத்திலும் உள்ள தலைவர்களை, முக்கியமானவர்களானாலும் முக்கியமற்றவர்களானாலும் அவர்களைக் கொன்றீர். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 உமது ஜனத்தின் இரட்சிப்புக்காகவும் நீர் அபிஷேகம் பண்ணுவித்தவனின் இரட்சிப்புக்காகவுமே நீர் புறப்பட்டீர்; கழுத்தளவாக அஸ்திபாரத்தைத் திறப்பாக்கி, துஷ்டனுடைய வீட்டிலிருந்த தலைவனை வெட்டினீர்; (சேலா.) Viz kapitola |