கலாத்தியர் 3:22 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202222 ஆனால் வேதவசனமோ, முழு உலகமும் பாவத்தின்கீழ் கைதியாய் இருப்பதாகவே அறிவிக்கிறது. அதனால், கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தமானது, இயேசுகிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தின்மூலமாய் விசுவாசிக்கிறவர்களுக்கே கொடுக்கப்படுகிறது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்22 அப்படி இல்லாததினால், இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசம் உள்ளவர்களுக்குக் கொடுக்கப்படும்படி வேதம் எல்லாவற்றையும் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது. Viz kapitolaபரிசுத்த பைபிள்22 ஆனால் இதுவும் உண்மை கிடையாது. ஏனென்றால் எல்லா மனிதர்களும் பாவத்தால் கட்டப்பட்டுள்ளதாக வேதவாக்கியங்கள் கூறுகிறது. எனவே தேவனுடைய வாக்குறுதி, விசுவாசத்தின் மூலமே கிடைக்கிறது. இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைப்பவர்களுக்கே வாக்குறுதி வந்து சேரும். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு22 ஆனால் இயேசு கிறிஸ்துவின்மீது வைக்கும் விசுவாசத்தின் மூலமாய் கிடைக்கும் வாக்குறுதி, விசுவாசிக்கின்றவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காக வேதவசனமானது அனைத்தையும் பாவத்தின் கீழ் சிறை வைத்துவிட்டது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)22 அப்படியிராதபடியால், இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும்படி வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது. Viz kapitola |