கலாத்தியர் 3:10 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 மோசேயின் சட்டத்தின் கிரியைகளை நம்பிக்கொண்டிருக்கும் எல்லாரும் சாபத்துக்கு உட்பட்டிருக்கிறார்கள். ஏனெனில், “மோசேயின் சட்டப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் எல்லாவற்றையும் கைக்கொள்ளாமல் இருக்கும், ஒவ்வொருவனும் சபிக்கப்பட்டவன்” என்று எழுதியிருக்கிறது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 நியாயப்பிரமாணத்தின் செய்கைக்காரர்களாகிய எல்லோரும் சாபத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள்; ஏனென்றால் நியாயப்பிரமாணப் புத்தகத்தில் எழுதப்பட்டவைகள் எல்லாவற்றையும் தொடர்ந்து செய்யாதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே. Viz kapitolaபரிசுத்த பைபிள்10 ஆனால் சட்டத்தின்படி வாழ்பவர்கள் எவரும் சாபத்துக்குள்ளாவார்கள். ஏனென்றால் “ஒருவன் சட்டங்களைத் தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவன் சபிக்கப்படுவான்” என்று சட்டங்களின் நூலில் எழுதப்பட்டுள்ளது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு10 நீதிச்சட்டத்தின் நல்ல செயல்களில் தங்கியிருக்கும் எல்லோரும் சாபத்துக்கு உட்பட்டிருக்கிறார்கள். ஏனெனில், “நீதிச்சட்டப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் எல்லாவற்றையும் கைக்கொண்டு, அதன்படி தொடர்ந்து வாழாத ஒவ்வொருவனும் சபிக்கப்பட்டவன்” என்று எழுதப்பட்டிருக்கின்றது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே. Viz kapitola |