கலாத்தியர் 1:17 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202217 எனக்கு முன்னமே அப்போஸ்தலர்களாய் இருந்தவர்களைச் சந்திக்கும்படி, நான் எருசலேமுக்குப் போனதுமில்லை. நானோ உடனே அரேபிய வனாந்திரத்திற்குப்போய், பின்பு தமஸ்கு பட்டணத்துக்குத் திரும்பிவந்தேன். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்17 எனக்கு முன்பே எருசலேமில் அப்போஸ்தலர்களாக இருந்தவர்களிடம் போகாமலும்; அரபிதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், மீண்டும் தமஸ்கு ஊருக்குத் திரும்பிவந்தேன். Viz kapitolaபரிசுத்த பைபிள்17 எருசலேமில் உள்ள அப்போஸ்தலர்களையும் நான் போய்ப் பார்க்கவில்லை. அவர்கள் எல்லாம் எனக்கு முன்னரே அப்போஸ்தலர்களாய் இருக்கிறவர்கள். ஆனால் நான் யாருக்காகவும் காத்திருக்காமல் அரேபியாவுக்குப் போனேன். பிறகு அங்கிருந்து தமஸ்கு என்ற நகருக்குத் திரும்பிவந்தேன். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு17 எனக்கு முன்னர் அப்போஸ்தலர்களாய் இருந்தவர்களைச் சந்திப்பதற்காக நான் எருசலேமுக்குப் போகவுமில்லை. மாறாக உடனே அரேபியாவுக்குச் சென்று, பின்பு தமஸ்கு பட்டணத்துக்குத் திரும்பினேன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)17 எனக்கு முன்னே அப்போஸ்தலரானவர்களிடத்திலே எருசலேமுக்குப் போகாமலும்; அரபிதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், மறுபடியும் தமஸ்கு ஊருக்குத் திரும்பிவந்தேன். Viz kapitola |