எஸ்தர் 9:24 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202224 ஏனெனில், எல்லா யூதர்களின் பகைவனான, ஆகாகியன் அம்மெதாத்தாவின் மகன் ஆமான் யூதர்களை அழிப்பதற்கென அவர்களுக்கு எதிராகத் திட்டமிட்டிருந்தான். அத்துடன் அவர்களுடைய அழிவுக்காகவும், நாசத்துக்காகவும் அவன் பூர் எனப்படும் சீட்டையும் போட்டிருந்தான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்24 அம்மெதாத்தாவின் மகனாகிய ஆமான் என்னும் ஆகாகியன், யூதர்களுக்கெல்லாம் எதிரியாக இருந்து யூதர்களை அழிக்க நினைத்து, அவர்களை அழிக்கவும், ஒடுக்கவும் பூர் என்னப்பட்ட சீட்டைப் போட செய்தான். Viz kapitolaபரிசுத்த பைபிள்24 அம்மெதாத்தாவின் குமாரனான ஆமான் என்னும் ஆகாகியன் யூதர்களின் பகைவன். யூதர்களை அழிக்க அவன் ஒரு தீய திட்டத்தை வைத்திருந்தான். அவன் யூதர்களை அழிக்கும் நாளை குலுக்கல் சீட்டு போட்டு தேர்ந்தெடுத்து வைத்திருந்தான். அக்காலத்தில் குலுக்கல் சீட்டானது “பூர்” என்று அழைக்கப்பட்டது. எனவே, விடுமுறைநாளும் “பூரீம்” என அழைக்கப்பட்டது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)24 அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியன், யூதருக்கெல்லாம் சத்துருவாயிருந்து யூதரைச் சங்கரிக்க நினைத்து, அவர்களை அழிக்கவும் நிர்மூலமாக்கவும், பூர் என்னப்பட்ட சீட்டைப் போடுவித்தான். Viz kapitola |