உபாகமம் 30:10 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து, இந்த சட்டப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் அவருடைய கட்டளைகளையும், விதிமுறைகளையும் கைக்கொண்டு, உங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் திரும்பும்போது அவர் உங்களைச் செழிக்கப்பண்ணுவார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 உன் தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து, இந்த நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற அவருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்போதும், உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் திரும்பும்போதும், யெகோவா உன் முற்பிதாக்கள்மேல் மகிழ்ச்சியாயிருந்ததுபோல, உன்மேலும் உனக்கு நன்மை உண்டாக மீண்டும் மகிழ்ச்சியாயிருப்பார். Viz kapitolaபரிசுத்த பைபிள்10 ஆனால் நீ உனது தேவனாகிய கர்த்தர் சொன்னபடி செய்ய வேண்டும். நீ அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். இந்தப் போதனைகளின் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள விதிகளைப் பின்பற்ற வேண்டும். உனது தேவனாகிய கர்த்தருக்கு நீ உன் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் கீழ்ப்படிய வேண்டும். அப்போது உனக்கு இந்த நன்மைகள் ஏற்படும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து, இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிற அவருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்போதும், உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் திரும்பும்போதும், கர்த்தர் உன் பிதாக்கள்மேல் சந்தோஷமாயிருந்ததுபோல, உன்மேலும் உனக்கு நன்மை உண்டாகத் திரும்பவும் சந்தோஷமாயிருப்பார். Viz kapitola |