உபாகமம் 21:17 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202217 ஆனால் தான் அன்பு செலுத்தாத மனைவியின் மகனுக்குத் தன் சொத்தில் மற்றவனுக்குக் கொடுப்பதைப்போல் இரண்டு மடங்கு கொடுத்து, அவனைத் தன் மூத்த பிள்ளையாக ஏற்றுக்கொள்ளவேண்டும். அந்த மகனே தன் தகப்பனின் வல்லமையின் முன் அடையாளமானவன். முதற்பேறானவனின் உரிமை அவனுக்கே உரியதாகும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்17 வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்தவனை மூத்தமகனாக அங்கீகரித்து, தனக்கு உண்டான சொத்துக்களிலெல்லாம் இரண்டு பங்கை அவனுக்குக் கொடுக்கவேண்டும்; அவன் தன் தகப்பனுடைய முதற்பெலன், மூத்தமகனின் உரிமை அவனுக்கே உரியது. Viz kapitolaபரிசுத்த பைபிள்17 அவன் தான் நேசிக்காத மனைவியிடம் பிறந்த முதல் குமாரனை தனது குடும்பத்தின் மூத்த பிள்ளையாக ஒப்புக்கொள்ள வேண்டும். அவன் தனது மூத்த குமாரனுக்கு தன்னுடைய எல்லாவற்றிலும் இரண்டு பங்கினைக் கொடுக்க வேண்டும். ஏனென்றால், அந்த குழந்தையே மூத்த பிள்ளைக்கான உரிமையைப் பெறுகிறது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)17 வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்தவனை சேஷ்டபுத்திரனாக அங்கிகரித்து, தனக்கு உண்டான ஆஸ்திகளிலெல்லாம் இரண்டு பங்கை அவனுக்குக் கொடுக்க வேண்டும்; அவன் தன் தகப்பனுடைய முதற்பலன், சேஷ்டபுத்திர சுதந்தரம் அவனுக்கே உரியது. Viz kapitola |