அப்போஸ்தலர் 25:21 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202221 ஆனால் பவுலோ, ரோமப் பேரரசனுடைய தீர்ப்புக்காக தன்னைக் காவலில் வைத்துக்கொள்ளும்படி மேல்முறையீடு செய்தான். எனவே அவன் ரோமப் பேரரசனிடம் அனுப்பப்படும் வரைக்கும், தடுப்புக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டேன்” என்றான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்21 அதற்குப் பவுல், தான் இராயருக்கு முன்பாக நீதி விசாரிக்கப்படும்படி நிறுத்தப்படவேண்டுமென்று முறையிட்டபோது, நான் அவனை இராயனிடத்திற்கு அனுப்பும்வரை காவல் செய்யும்படி ஆணையிட்டேன் என்றான். Viz kapitolaபரிசுத்த பைபிள்21 ஆனால் பவுல் செசரியாவிலேயே வைக்கப்பட வேண்டுமென்று கேட்டான். அவன் இராயர் முடிவெடுக்க வேண்டுமென விரும்புகிறான். ரோமில் இராயரிடம் அவனை அனுப்பும் மட்டும் அவன் இங்கேயே வைக்கப்பட நான் கட்டளையிட்டுள்ளேன்” என்று கூறினான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு21 ஆனால் பவுலோ பேரரசர் சீசருடைய தீர்ப்புக்காக மேன்முறையீடு செய்து, அதுவரை தன்னைக் காவலில் வைத்துக்கொள்ளும்படி வேண்டிக்கொண்டான். எனவே அவன் சீசரிடம் அனுப்பப்படும் வரைக்கும், அவனைத் தடுப்புக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டேன்” என்றான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)21 அதற்குப் பவுல், தான் இராயருக்கு முன்பாக நியாயம் விசாரிக்கப்படும்படிக்கு நிறுத்திவைக்கப்படவேண்டுமென்று அபயமிட்டபோது, நான் அவனை இராயனிடத்திற்கு அனுப்புமளவும் காவல்பண்ணும்படி கட்டளையிட்டேன் என்றான். Viz kapitola |