அப்போஸ்தலர் 15:29 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202229 நீங்கள் இறைவன் அல்லாதவைகளுக்குப் பலியிடப்பட்ட உணவைத் தவிர்க்கவேண்டும், இரத்தத்தையும், நெரித்துக் கொல்லப்பட்ட மிருகத்தின் இறைச்சியையும் விலக்கிக்கொள்ள வேண்டும், முறைகேடான பாலுறவுகளில் ஈடுபடக்கூடாது. இவ்வாறான காரியங்களைத் தவிர்த்துக்கொள்ள எல்லா முயற்சிகளையும் செய்வது நல்லது. உங்களுக்கு நலமுண்டாவதாக. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்29 அவசியமான இவைகளைத்தவிர வேறு பாரமான எந்தவொரு காரியத்தையும் உங்கள்மேல் சுமத்தாமல் இருப்பது பரிசுத்த ஆவியானவருக்கும் எங்களுக்கும் நலமாகத் தோன்றியது; இவைகளைச் செய்யாமல் நீங்கள் உங்களைக் காத்துக்கொள்ளுவது நலமாக இருக்கும். சுகமாக இருப்பீர்களாக என்று எழுதினார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்29 விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்ட உணவைச் சாப்பிடாதீர்கள். இரத்தத்தை ருசிக்காதீர்கள். நெரித்துக்கொல்லப்பட்ட மிருகங்களைச் சாப்பிடாதீர்கள். பாலியல் பாவங்களில் ஈடுபடாதீர்கள். இத்தகைய காரிங்களில் நீங்கள் உங்களை ஈடுபடுத்தாதிருந்தால் நல்லது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு29 விக்கிரகங்களுக்குப் பலியிடப்பட்ட உணவிலிருந்தும், இரத்தத்தைச் சாப்பிடுவதிலிருந்தும், நெரித்துக் கொல்லப்பட்ட மிருகங்களைச் சாப்பிடுவதிலிருந்தும் மற்றும் பாலியல் ஒழுக்கக்கேட்டிலிருந்தும் உங்களை நீங்கள் விலக்கிக்கொள்ள வேண்டும். இவ்வாறான காரியங்களைத் தவிர்த்துக்கொள்ள எல்லா முயற்சிகளையும் செய்வது நல்லது. உங்களுக்கு நலமுண்டாவதாக. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)29 அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது; இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக் கொள்ளுவது நலமாயிருக்கும். சுகமாயிருப்பீர்களாக என்று எழுதினார்கள். Viz kapitola |