2 தீமோ 2:21 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202221 ஒரு மனிதன் மதிப்பற்ற காரியங்களிலிருந்து சுத்திகரிக்கப்படுவானாகில், அவன் மதிப்புக்குரிய நோக்கங்களுக்கு ஏற்ற கருவியாவான். அவன் பரிசுத்தமாக்கப்பட்டு, எஜமானுக்கு உகந்தவனாகவும், எந்த நல்ல செயல்களைச் செய்வதற்கும் ஆயத்தம் பண்ணப்பட்டவனாகவும் இருப்பான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்21 ஆகவே, ஒருவன் இவைகளைவிட்டுத் தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நல்ல செயல்களுக்கும் ஆயத்தம் செய்யப்பட்டதுமான மதிப்புமிக்கப் பாத்திரமாக இருப்பான். Viz kapitolaபரிசுத்த பைபிள்21 எவனொருவன் தீய காரியங்களில் ஈடுபடாமல் விலகி தன்னைத் தானே சுத்தமாக வைத்துக்கொள்கிறானோ அவன் சிறப்பான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவான். அவன் பரிசுத்தமாக்கப்பட்டு எஜமானுக்குப் பயன்படுபவனாக இருப்பான். அவன் எவ்வித நற்பணி செய்யவும் தயாராக இருப்பான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு21 எவராவது தாழ்வானவைகளிலிருந்து முழுவதும் சுத்திகரிக்கப்பட்டிருந்தால், அவர் உயர்வான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் பாத்திரமாக இருப்பார். அவர் பரிசுத்தமாக்கப்பட்டு எஜமானுக்கு உகந்தவராகவும், எந்த நல்ல செயல்களையும் செய்ய ஆயத்தமாக்கப்பட்டவராகவும் இருப்பார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)21 ஆகையால் ஒருவன் இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான். Viz kapitola |