2 தெச 2:13 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 ஆனால், கர்த்தரின் அன்புக்குரிய பிரியமானவர்களே, உங்களையோ, இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளும்படி ஆரம்பத்திலிருந்தே இறைவன் தெரிந்துகொண்டார். பரிசுத்த ஆவியானவரின் பரிசுத்தமாக்குகிற செயலினாலும், சத்தியத்தை நம்பி விசுவாசிக்கிறதினாலும், இந்த இரட்சிப்பு வருகிறது. இதனாலேயே உங்களுக்காக, நாங்கள் எப்பொழுதும் இறைவனுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 கர்த்தருக்குப் பிரியமான சகோதரர்களே, நீங்கள் ஆவியானவராலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும், சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப்படையும்படிக்கு, தொடக்கம் முதல் தேவன் உங்களைத் தெரிந்துகொண்டபடியினாலே, நாங்கள் உங்களைக்குறித்து எப்பொழுதும் தேவனுக்கு நன்றிசொல்ல கடனாளிகளாக இருக்கிறோம். Viz kapitolaபரிசுத்த பைபிள்13 சகோதர, சகோதரிகளே! கர்த்தர் உங்களிடம் அன்புடன் இருக்கிறார். நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவே தேவன் ஆரம்பத்திலேயே உங்களைத் தேர்ந்தெடுத்தார். ஆகவே, உங்களுக்காக எப்பொழுதும் நாங்கள் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம். உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற பரிசுத்த ஆவியானவராலும், உண்மையின் மீது நீங்கள் வைக்கும் விசுவாசத்தாலும் இரட்சிக்கப்படுகிறீர்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 ஆனால், கர்த்தரின் அன்புக்குரியவர்களான பிரியமானவர்களே, உங்களுக்காக எப்போதும் இறைவனுக்கு நன்றி செலுத்த நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். ஏனெனில், சத்தியத்தை விசுவாசிப்பதனாலும் பரிசுத்த ஆவியானவரின் பரிசுத்தமாக்குகின்ற செயலினாலும் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளும்படி இறைவன் உங்களை ஆரம்பத்திலேயே தெரிவு செய்தார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 கர்த்தருக்குப் பிரியமான சகோதரரே, நீங்கள் ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும், சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப்படையும்படிக்கு, ஆதிமுதல் தேவன் உங்களைத் தெரிந்துகொண்டபடியினாலே, நாங்கள் உங்களைக்குறித்து எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். Viz kapitola |