2 சாமு 20:17 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202217 எனவே யோவாப் அவளிடம் வந்தபோது அவள், “நீர்தானா யோவாப்?” என்று கேட்டாள். அதற்கு யோவாப், “நானேதான்” என்றான். அப்பொழுது அப்பெண், “உமது அடியாள் சொல்வதைக் கேளும்” என்றாள். அதற்கு அவன், “கேட்கிறேன்” என்றான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்17 அவன் அவளுக்கு அருகில் வந்தபோது, அந்தப் பெண்: நீர்தானா யோவாப் என்று கேட்டாள்; அவன் நான்தான் என்றான்; அப்பொழுது, அவள் அவனைப் பார்த்து: உமது அடியாளின் வார்த்தைகளைக் கேளும் என்றாள்; அவன்: கேட்கிறேன் என்றான். Viz kapitolaபரிசுத்த பைபிள்17 யோவாப் அப்பெண்ணை சந்தித்துப் பேசுவதற்குச் சென்றான். அப்பெண் அவனிடம், “நீர் யோவாபா?” என்று கேட்டாள். யோவாப், “ஆம் நானே” என்று பதில் கூறினான். அப்போது அப்பெண்மணி, “நான் கூறுவதைக் கேள்” என்றாள். யோவாப், “நான் கேட்கிறேன்” என்றான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)17 அவன் அவளுக்குச் சமீபத்தில் வந்தபோது, அந்த ஸ்திரீ: நீர்தானா யோவாப் என்று கேட்டாள்; அவன் நான்தான் என்றான்; அப்பொழுது, அவள் அவனைப் பார்த்து: உமது அடியாளின் வார்த்தைகளைக் கேளும் என்றாள்; அவன்: கேட்கிறேன் என்றான். Viz kapitola |