2 பேது 2:12 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202212 ஆனால் இவர்களோ, தாங்கள் விளங்கிக்கொள்ளாத விஷயங்களில் அவதூறாகப் பேசுகிறார்கள். இவர்கள் மனிதத் தன்மையற்ற மிருகங்களைப் போன்றவர்கள். தங்கள் இயல்பின்படியே நடக்கின்ற உயிரினங்களைப் போன்றவர்கள். இவர்கள் பிடிக்கப்பட்டு அழிக்கப்படுவதற்கென்றே பிறந்திருக்கின்ற மிருகங்களைப்போலவே இவர்களும் அழிந்துபோவார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்12 இவர்களோ பிடிபட்டு அழிக்கப்படுவதற்கு உண்டான புத்தி இல்லாத மிருகஜீவன்களைப்போலத் தங்களுக்குத் தெரியாதவைகளை அவமானப்படுத்தி, தங்களுடைய தீயச்செயலினால் கெட்டு, அழிந்து, அநீதீயின் பலனை அடைவார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்12 தாம் அறியாத விஷயங்களைப்பற்றி அவர்கள் பேசுகிறார்கள். இம்மக்கள் காரண காரியமின்றி வெறும் உந்துதலால் செயல்படும் மிருகங்களைப்போன்றவர்கள். பிடித்துக் கொல்லப்படுவதற்காகப் பிறக்கின்ற காட்டு மிருகங்களைப்போல இம்மக்களும் அழிக்கப்படுவார்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு12 ஆனால் இவர்களோ பிடிக்கப்பட்டு அழிக்கப்படுவதற்காகவே பிறந்திருக்கின்ற, அழிவை எதிர்நோக்கியிருக்கும் புத்தியில்லாத மிருகங்களைப் போல புரியாத விடயங்களில் அவதூறு பேசுகின்றார்கள். அழிவுக்குரிய மிருகங்களைப் போல் இவர்களும் அழிந்து போவார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)12 இவர்களோ பிடிபட்டழிக்கப்படுவதற்கு உண்டான புத்தியற்ற மிருகஜீவன்களைப்போலத் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷித்து, தங்கள் கேட்டிலே கெட்டழிந்து, அநீதத்தின் பலனை அடைவார்கள். Viz kapitola |