2 இராஜா 8:12 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202212 அப்போது ஆசகேல், “என் தலைவனே, நீர் ஏன் அழுகிறீர்?” என்று கேட்டான். அதற்கு எலிசா, “இஸ்ரயேலருக்கு நீ செய்யப்போகும் எல்லாத் தீமைகளையும் நான் அறிவேன். அவர்களுடைய அரணான இடங்களை அழித்துவிடுவாய். அவர்களுடைய வாலிபரை வாளால் கொலைசெய்வாய். அவர்களுடைய குழந்தைகளை நிலத்தில் மோதியடிப்பாய். அவர்களுடைய கர்ப்பிணிகளைக் கிழித்து அழித்துப்போடுவாய்” என்று கூறினான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்12 அப்பொழுது ஆசகேல்: என் ஆண்டவனே, ஏன் அழுகிறீர் என்று கேட்டான். அதற்கு அவன்: நீ இஸ்ரவேல் மக்களுக்குச் செய்யும் தீங்கை நான் அறிந்திருக்கிறபடியால் அழுகிறேன்; நீ அவர்களுடைய கோட்டைகளை அக்கினிக்கு இரையாக்கி, அவர்களுடைய வாலிபர்களைப் பட்டயத்தால் கொன்று, அவர்களுடைய குழந்தைகளைத் தரையோடே மோதி, அவர்களுடைய கர்ப்பவதிகளின் வயிற்றைக் கிழித்துப்போடுவாய் என்றான். Viz kapitolaபரிசுத்த பைபிள்12 ஆசகேல் அவனிடம், “ஐயா ஏன் அழுகிறீர்?” என்று கேட்டான். அதற்கு எலிசா, “நீ இஸ்ரவேலர்களுக்குச் செய்யப்போகும் தீமைகள் என்னென்ன என்பதை நான் அறிவேன். அதற்காக அழுகிறேன். நீ அவர்களின் கோட்டையுள்ள நகரங்களை எரிப்பாய். நீ வாளால் இளைஞர்களைக் கொல்வாய், குழந்தைகளைக் கொல்வாய், கருவிலுள்ள குழந்தைகளையும் கீறிப்போடுவாய்” என்றான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)12 அப்பொழுது ஆசகேல்: என் ஆண்டவன் அழுகிறது என்ன என்று கேட்டான். அதற்கு அவன்: நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் செய்யும் தீங்கை நான் அறிந்திருக்கிறபடியினால் அழுகிறேன்; நீ அவர்கள் கோட்டைகளை அக்கினிக்கு இரையாக்கி, அவர்கள் வாலிபரைப் பட்டயத்தால் கொன்று, அவர்கள் குழந்தைகளைத் தரையோடே மோதி, அவர்கள் கர்ப்பவதிகளைக் கீறிப்போடுவாய் என்றான். Viz kapitola |