2 கொரி 9:12 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202212 எனவே நீங்கள் மேற்கொண்டிருக்கின்ற இந்தப் பணி, இறைவனுடைய மக்களின் தேவைகளைச் சந்திக்கிறது மட்டுமல்ல, அநேகர் இறைவனுக்கு நன்றி செலுத்துவதினாலே, அது மிகுந்த பலனுள்ளதாயிருக்கிறது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்12 இந்த தர்ம உதவியாகிய பணிவிடை பரிசுத்தவான்களுடைய குறைவுகளை நீக்குகிறதுமட்டுமல்லாமல், அநேகர் தேவனை ஸ்தோத்திரிப்பதினாலே சம்பூரண பலன் உள்ளதாகவும் இருக்கும். Viz kapitolaபரிசுத்த பைபிள்12 தேவைப்படும் தேவனுடைய மக்களுக்கு நீங்கள் உதவி செய்வது பெரும் சேவையாகும். இதற்கு இணையானது வேறில்லை. தேவனுக்கு அளவு கடந்த நன்றிகளை இது கொண்டு வரும். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு12 எனவே உங்களது இந்த உதவிப் பணியானது இறைவனுடைய மக்களின் தேவைகளைச் சந்திப்பதற்காக மட்டுமல்லாது, அதனால் அதிகமானவர்கள் இறைவனுக்கு நன்றி செலுத்தி, நன்றி பெருகவும் காரணமாக அமையும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)12 இந்தத் தர்மசகாயமாகிய பணிவிடை பரிசுத்தவான்களுடைய குறைவுகளை நீக்குகிறதுமல்லாமல், அநேகர் தேவனை ஸ்தோத்திரிப்பதினாலே சம்பூரணபலனுள்ளதாயும் இருக்கும். Viz kapitola |