2 கொரி 3:6 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 அவர் எங்களை ஒரு புது உடன்படிக்கையின் ஊழியக்காரராய் இருப்பதற்கு தகுதியுள்ளவராக்கினார். அந்த உடன்படிக்கை எழுதப்பட்ட மோசேயின் சட்டத்தைச் சார்ந்ததல்ல, ஆவியையே சார்ந்தது. எழுதப்பட்ட மோசேயின் சட்டம் கொல்லுகிறது, ஆனால் ஆவியானவரோ வாழ்வைக் கொடுக்கிறார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 புதிய உடன்படிக்கையின் ஊழியக்காரர்களாக இருப்பதற்கு, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாக இல்லாமல், ஆவியானவருக்குரியதாக இருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆனால், ஆவியோ உயிர் கொடுக்கிறது. Viz kapitolaபரிசுத்த பைபிள்6 புது உடன்படிக்கை ஊழியராக இருக்கும்படி அவரே எங்களைத் தகுதியுள்ளவர் ஆக்கினார். இந்தப் புதிய ஒப்பந்தம் வெறும் எழுத்துப் பூர்வமான ஒப்பந்தமாய் இராமல் ஆவிக்குரியதாக இருக்கிறது. எழுத்துப் பூர்வமான சட்டம் மரணத்தைக் கொண்டு வருகிறது. ஆவியோ வாழ்வைத் தருகிறது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 அவர் எங்களை புது உடன்படிக்கையின் ஊழியக்காரராய் இருப்பதற்கு அவசியமான திறன் உடையவர்கள் ஆக்கினார். அந்த புது உடன்படிக்கை, எழுத்துமூலம் எழுதி கொடுக்கப்பட்டதாக இராமல் ஆவிக்குரியதாயிருக்கிறது. முன்பு எழுத்துமூலம் கொடுக்கப்பட்ட நீதிச்சட்டம் மரணத்தை அளிக்கிறது, ஆவியோ உயிரளிக்கிறது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது. Viz kapitola |