2 கொரி 12:15 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 எனவே நான் உங்களுக்காக மிக்க மகிழ்ச்சியோடு, எனக்குள்ள எல்லாவற்றையும் செலவு செய்வேன். என்னையும் இழக்க ஆயத்தமாயிருக்கிறேன். நான் இவ்வாறு உங்களில் அதிகம் அன்பாயிருக்கும் போது, நீங்கள் என்னில் குறைவான அன்பு செலுத்தலாமா? Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 எனவே, நான் உங்களை எவ்வளவு அதிகமாக நேசிக்கிறேனோ அவ்வளவு குறைவாக உங்களால் நான் நேசிக்கப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாக நான் உங்களுடைய ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன். Viz kapitolaபரிசுத்த பைபிள்15 எனவே, நான் எனக்குரியவற்றையெல்லாம் உங்களுக்காகச் செலவு செய்வதில் மகிழ்ச்சியாக உள்ளேன். நான் என்னையும் உங்களுக்காகத் தருவேன். நான் உங்களை மிகுதியாக நேசித்தால் நீங்கள் என்னைக் குறைவாக நேசிப்பீர்களா? Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு15 நான் என்னிடம் உள்ளவற்றை உங்களுக்காக மிக்க மகிழ்ச்சியோடு செலவு செய்வேன். என்னையும்கூட தந்து விடுவேன். இவ்விதமாக நான் உங்களில் அதிக அன்பாயிருக்கும்போது, நீங்கள் என்மீது காட்டும் அன்பு குறைந்து காணப்படலாமா? Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 ஆதலால், நான் உங்களில் எவ்வளவு அதிகமாய் அன்பு கூருகிறேனோ அவ்வளவு குறைவாய் உங்களால் அன்புகூரப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாய் நான் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன். Viz kapitola |