2 கொரி 10:5 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 அவற்றினால் நாம் விவாதங்களையும், இறைவனைப்பற்றிய அறிவை அடைவதற்குத் தடையாக நிற்கும் எல்லா மேட்டிமைகளையும் அழித்துப் போடுகிறோம். நாங்கள் ஒவ்வொரு மனிதனுடைய சிந்தனையையும் கைதியாக்கி கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் செய்கிறோம். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 அவைகளால் நாங்கள் வாக்குவாதங்களையும், தேவனை அறிகிற அறிவிற்கு விரோதமாக எழும்புகிற எல்லா மேட்டிமையையும் அழித்து, எல்லா எண்ணங்களையும் கிறிஸ்துவிற்குக் கீழ்ப்படியுமாறு சிறைப்படுத்துகிறவர்களாக இருக்கிறோம். Viz kapitolaபரிசுத்த பைபிள்5 தேவனுடைய ஞானத்திற்கு எதிராகத் தோன்றும் பெருமிதங்களையெல்லாம் நாம் அழித்து வருகிறோம். அவர்களின் சிந்தனைகளைக் கவர்ந்து கிறிஸ்துவுக்கு அடிபணியுமாறு செய்கிறோம். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 அவற்றினால் நாம் விவாதங்களையும், இறைவனைப் பற்றிய அறிவை அடைவதற்கு எதிராக இருக்கும் எல்லா அகங்காரமான எண்ணங்களையும் தகர்த்தெறிந்து, அனைத்து சிந்தனைகளையும் சிறைப்படுத்தி கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் செய்கின்றோம். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம். Viz kapitola |