1 பேது 3:18 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202218 ஏனெனில், கிறிஸ்து பாவங்களுக்காக ஒரே முறையாக இறந்தார். உங்களை இறைவனிடம் கொண்டுவரும்படியாக, நீதிமானான அவர், நீதியற்றவர்களுக்காக இறந்தார். அவரது உடல் கொல்லப்பட்டது, ஆனால் ஆவியில் உயிர்ப்பிக்கப்பட்டார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்18 ஏனென்றால், கிறிஸ்துவும் நம்மை தேவனிடம் சேர்ப்பதற்காக அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதி உள்ளவராகப் பாவங்களுக்காக ஒருமுறை பாடுகள் பட்டார்; அவர் சரீரத்திலே கொலை செய்யப்பட்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். Viz kapitolaபரிசுத்த பைபிள்18 ஏனெனில் ஒட்டுமொத்தமாக நம் பாவங்களுக்காக கிறிஸ்துவும் மரித்தார். குற்றம் நிறைந்த மனிதர்களுக்காக பாவமேயில்லாத அவர் இறந்தார். இதன்மூலம் உங்களை தேவனிடம் வழிகாட்டினார். இயற்கையான மனித வாழ்வில் அவர் மரணமடைய நேரிட்டது. ஆனால் உயர்ந்த ஆன்மீக நிலையில் அவர் மீண்டும் எழுப்பப்பட்டார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு18 ஏனெனில், கிறிஸ்து எல்லாப் பாவங்களுக்காகவும் ஒரே முறை மரணித்தார். உங்களை இறைவனிடம் கொண்டு செல்லும்படியாக, நீதிமானான அவர் நீதியற்றவர்களுக்காக மரணித்தார். அவரது உடல் கொல்லப்பட்டது, ஆனால் ஆவியில் உயிரோடு எழுப்பப்பட்டார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)18 ஏனெனில், கிறிஸ்துவும் நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். Viz kapitola |