1 பேது 2:10 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 முன்பு நீங்கள் ஒரு மக்களாக மதிக்கப்படவில்லை. ஆனால் இப்பொழுதோ நீங்கள் இறைவனுடைய மக்களாய் இருக்கிறீர்கள்; முன்பு நீங்கள் இறைவனுடைய இரக்கத்தைப் பெற்றிருக்கவில்லை. ஆனால் இப்பொழுதோ நீங்கள் அவருடைய இரக்கத்தைப் பெற்றிருக்கிறீர்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 முன்பே நீங்கள் தேவனுடைய மக்களாக இருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய மக்களாக இருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெற்றுக்கொள்ளவில்லை, இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாக இருக்கிறீர்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்10 ஒரு காலத்தில் நீங்கள் தேவனுடைய மனிதர்களாக இருக்கவில்லை. ஆனால் இப்போது தேவனுடைய மக்களாக இருக்கிறீர்கள். ஒரு காலத்தில் தேவனுடைய இரக்கத்தை நீங்கள் பெறவில்லை. ஆனால் இப்போது நீங்கள் தேவனிடமிருந்து இரக்கத்தைப் பெற்றுள்ளீர்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு10 முன்பு நீங்கள் மக்களாக இருக்கவில்லை, ஆனால் இப்பொழுதோ நீங்கள் இறைவனுடைய மக்கள். முன்பு நீங்கள் இறைவனுடைய இரக்கத்தைப் பெறாதிருந்தீர்கள், ஆனால் இப்பொழுதோ இரக்கத்தைப் பெற்றிருக்கிறீர்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெறாதவர்களாயிருந்தீர்கள், இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாயிருக்கிறீர்கள். Viz kapitola |