1 யோவா 3:2 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 அன்பான நண்பரே, இப்பொழுது நாம் இறைவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம். ஆனால் இனிமேல், நாம் எப்படிப்பட்டவர்களாய் இருப்போம் என்பது, இன்னும் தெளிவாக்கப்படவில்லை. ஆனால் கிறிஸ்து மீண்டும் வரும்போது நாம் அவரைப்போலவே இருப்போம் என்பதை அறிந்திருக்கிறோம். ஏனெனில், அவர் உண்மையாய் இருக்கின்றபடியே, நாம் அவரைக் காணப்போகிறோம். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம், இனி எவ்விதமாக இருப்போம் என்று இன்னும் வெளிப்படவில்லை; ஆனாலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற பிரகாரமாகவே நாம் அவரைக் காண்பதினால், அவருடைய சாயலாக இருப்போம் என்று அறிந்திருக்கிறோம். Viz kapitolaபரிசுத்த பைபிள்2 அன்பான நண்பர்களே, நாம் இப்போது தேவனின் பிள்ளைகள். நாம் எதிர்காலத்தில் எவ்வாறு இருப்போம் என்பது இன்னும் நமக்குக் காட்டப்படவில்லை. கிறிஸ்து மீண்டும் வரும்போது நாம் அவரைப்போல இருப்போம் என்பதை நாம் அறிவோம். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 அன்பானவர்களே, இப்போது நாம் இறைவனுடைய பிள்ளைகளாய் இருக்கின்றோம். இனிமேல் எப்படி இருப்போம் என்பது இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால் அவர் மீண்டும் வெளிப்படும்போது நாம் அவரைப் போலவே இருப்போம் என்பதை அறிந்திருக்கிறோம். ஏனெனில், அவர் இருக்கின்றபடியே நாம் அவரைக் காண்போம். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம். Viz kapitola |